TANSI Recruitment 2026: தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் காலியாக உள்ள 11 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
TANSI Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI) தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) |
| காலியிடங்கள் | 11 |
| பணிகள் | அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 31.03.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tansi.tn.gov.in/ |
TANSI Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் விவரம் | காலியிடங்கள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 07 |
| ஓட்டுநர் (Driver) | 04 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TANSI Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் விவரம் | தகுதிகள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | விண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். + மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். |
| ஓட்டுநர் (Driver) | விண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் + 5 வருட அனுபவத்துடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள்
- UR / MBC & DNC / BC: 18 – 34 ஆண்டுகள்
- SC / ST: 18 – 37 ஆண்டுகள்
TANSI Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | மாதம் Rs.15,700 – 50,000/- |
| ஓட்டுநர் (Driver) | மாதம் Rs.19,500 – 62,000/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026
TANSI Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், தங்களது சுயவிவரக் குறிப்பு (Bio-Data/Resume) மற்றும் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (TANSI), எண். 15, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை – 600 032.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.









