Tamil Development and Information Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திரைப்பட பிரிவு, சென்னை – 02 ல் காலியாக உள்ள ஒரு 02 திறன்மிகு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
Tamil Development and Information Department Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை Tamil Nadu Film Division, Tamil Development and Information Department |
| காலியிடங்கள் | 02 |
| பணிகள் | திறன்மிகு உதவியாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 20.03.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tn.gov.in/ |
Tamil Development and Information Department Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு திரைப்பட துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் விவரம் | காலியிடங்கள் |
| திறன்மிகு உதவியாளர் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Development and Information Department Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் விவரம் | தகுதிகள் |
| திறன்மிகு உதவியாளர் | விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
| பணியின் விவரம் | வயது வரம்பு |
| திறன்மிகு உதவியாளர் | விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். |
சம்பள விவரங்கள்
| பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
| திறன்மிகு உதவியாளர் | மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதி & சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியமர்த்தப்படும் இடம்: தீரன் சின்னமலை மணிமண்டபம், ஓடநிலை, அரச்சலூர், ஈரோடு மாவட்டம்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2026
Tamil Development and Information Department Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- விண்ணப்பத் தயாரிப்பு: ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் முழுமையான விவரங்களை (Bio-Data) எழுத வேண்டும்.
- தேவையான விவரங்கள்:
- பெயர்
- தந்தையின் பெயர்
- முகவரி (தொடர்பு எண்ணுடன்)
- பிறந்த தேதி மற்றும் வயது
- கல்வித் தகுதி
- பணி அனுபவம் (ஏதேனும் இருப்பின்)
- கையொப்பம்: விண்ணப்பத்தின் இறுதியில் உங்களது கையொப்பத்தை மறக்காமல் இடவும்.
- அனுப்பும் முறை: தயார் செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை தயாரிப்பாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்பட பிரிவு, கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை – 600 002.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.









