Rural Development & Panchayat Raj Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தில் காலியாக உள்ள 03 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.02.2026 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Rural Development & Panchayat Raj Department Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) Government of Tamil Nadu Rural Development and Panchayat Department (TNRD) |
| காலியிடங்கள் | 03 |
| பணிகள் | வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 26.02.2026 |
| பணியிடம் | திருவள்ளூர் – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvallur.nic.in/ |
TNRD Tiruvallur Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி பெயர் | காலியிடங்கள் |
| வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் | 02 |
| தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Rural Development & Panchayat Raj Department Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:
| பணியின் பெயர் | கல்வித் தகுதி |
| வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) | ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Any Degree) தேர்ச்சி. 3 ஆண்டுகள் பணி அனுபவம் |
| தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் (IEC Consultant) | P.G. Mass Communication / Mass Media அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி. 3 ஆண்டுகள் பணி அனுபவம் |
TNRD Tiruvallur Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட வயது வரம்புகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Rural Development & Panchayat Raj Department Recruitment 2026 சம்பள விவரங்கள்
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் பின்வருமாறு:
| பணியின் பெயர் | மாதச் சம்பளம் (Consolidated Pay) |
| வட்டார ஒருங்கிணைப்பாளர் | Rs.20,000 – Rs.25,000 |
| தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் | Rs.25,000 – Rs.35,000 |
தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும்
Rural Development & Panchayat Raj Department Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2026
Rural Development & Panchayat Raj Department Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruvallur.nic.in/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது, கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்).
- பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு (Print out) எடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
கடைசித் தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.02.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரியை வந்து சேர வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







