Aadhaar Operator Supervisor Recruitment 2026: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள 252 ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Aadhaar Operator Supervisor Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
| காலியிடங்கள் | 252 |
| பணிகள் | ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 10.03.2026 |
| பணியிடம் | தருமபுரி, நீலகிரி, விருதுநகர் & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cscspv.in/ |
Aadhaar Operator Supervisor Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் – 252 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
| மாநிலம் (State) | காலியிடங்கள் |
| ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) | 7 |
| அசாம் (Assam) | 11 |
| பீகார் (Bihar) | 7 |
| சண்டிகர் (Chandigarh) | 1 |
| சத்தீஸ்கர் (Chhattisgarh) | 9 |
| குஜராத் (Gujarat) | 6 |
| ஹரியானா (Haryana) | 7 |
| இமாச்சலப் பிரதேசம் (Himachal Pradesh) | 1 |
| ஜார்கண்ட் (Jharkhand) | 5 |
| கர்நாடகா (Karnataka) | 34 |
| கேரளா (Kerala) | 17 |
| லடாக் (Ladakh) | 1 |
| மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) | 27 |
| மகாராஷ்டிரா (Maharashtra) | 25 |
| மேகாலயா (Meghalaya) | 1 |
| மிசோரம் (Mizoram) | 1 |
| நாகாலாந்து (Nagaland) | 1 |
| ஒடிசா (Odisha) | 3 |
| புதுச்சேரி (Puducherry) | 1 |
| பஞ்சாப் (Punjab) | 10 |
| ராஜஸ்தான் (Rajasthan) | 18 |
| சிக்கிம் (Sikkim) | 2 |
| தமிழ்நாடு (Tamil Nadu) | 3 |
| தெலுங்கானா (Telangana) | 10 |
| உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) | 35 |
| உத்தரகண்ட் (Uttarakhand) | 4 |
| மேற்கு வங்காளம் (West Bengal) | 7 |
| மொத்தம் (Grand Total) | 252 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Aadhaar Operator Supervisor Recruitment 2026 கல்வித் தகுதி
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
- 12-ஆம் வகுப்பு (HSC/Intermediate): பள்ளிக்கல்வி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.
- 10-ஆம் வகுப்பு + 2 வருட ITI: பத்தாம் வகுப்புடன் இரண்டு வருட தொழில்பயிற்சி (ITI) சான்றிதழ்.
- 10-ஆம் வகுப்பு + 3 வருட Diploma: பத்தாம் வகுப்புடன் மூன்று வருட தொழில்நுட்ப பட்டயப் படிப்பு (Polytechnic/Diploma).
UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
Aadhaar Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு 10.03.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். (அதிகபட்ச வயது வரம்பு கிடையாது).
Aadhaar Recruitment 2026 சம்பள விவரங்கள்
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Aadhaar Operator Supervisor Recruitment 2026 தேர்வு செயல்முறை
ஆதார் சேவை மையம் ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் இல்லை
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2026
Aadhaar Operator Supervisor Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.02.2026 முதல் 10.03.2026 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று சென்று உங்கள் மாநிலத்திற்கு நேராக இருக்க கூடிய Apply Now பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |







