Panchayat Union Office Assistant Recruitment 2026

தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 8 வது தேர்ச்சி போதும்.. ரூ.15,700 முதல் சம்பளம் || தேர்வு கிடையாது! Panchayat Union Office Assistant Recruitment 2026

Panchayat Union Office Assistant Recruitment 2026: தமிழ்நாடு அரசு, ஈரோடு மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள், இதற்கான விண்ணப்பங்களை 10.02.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
Government of Tamil Nadu Rural Development and Panchayat Department (TNRD)
காலியிடங்கள்04
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி10.02.2026
பணியிடம்ஈரோடு – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://erode.nic.in/

தமிழ்நாடு அரசு ஈரோடு ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)04

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டியதுடன், பணியின் தேவை கருதி மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட வயது வரம்புகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

  • பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஈரோடு ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர்சம்பள விகிதம் (Pay Scale)
அலுவலக உதவியாளர்ரூ. 15,700/- to ரூ. 58,100/-

தமிழ்நாடு அரசு ஈரோடு ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2026

தமிழ்நாடு அரசு ஈரோடு ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது, கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்).
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு (Print out) எடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஈரோடு, ஈரோடு மாவட்டம், மின்னஞ்சல் – 638001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

நிபந்தனைகள்

  1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. தேவையான இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
  3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.55/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10 x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
  5. அரசு விதிகளின்படி முன் குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top