TNRD Office Assistant Recruitment 2026

தேர்வு கிடையாது..8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ.15,700 சம்பளம்! TNRD Office Assistant Recruitment 2026

TNRD Office Assistant Recruitment 2026: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.02.2026 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
Government of Tamil Nadu Rural Development and Panchayat Department (TNRD)
காலியிடங்கள்01
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி09.02.2026
பணியிடம்திருப்பூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruppur.nic.in/

தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட வயது வரம்புகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

  • பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர்சம்பள விகிதம் (Pay Scale)
அலுவலக உதவியாளர்ரூ. 15,700/- to ரூ. 58,100/-

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2026

தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது, கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்).
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு (Print out) எடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைக்க வேண்டும்.

கடைசித் தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 09.02.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரியை வந்து சேர வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கியக் குறிப்பு: தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top