தேர்வு கிடையாது.. மத்திய அரசு நிறுவனத்தில் 3,883 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி போதும் Yantra India Recruitment 2024

Yantra India Recruitment 2024: மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் யந்த்ரா இந்தியா லிமிடெட்டில் காலியாகவுள்ள 3,883 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 122 இடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்யந்த்ரா இந்தியா லிமிடெட்
காலியிடங்கள்3883
பணிஅப்ரண்டிஸ்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.11.2024
(கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது)
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://recruit-gov.com/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

யந்த்ரா இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
ஐடிஐ இடங்கள்2,498
ஐடிஐ இல்லாத இடங்கள்1,385
மொத்தம்3,883

தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் 47 (10-ம் வகுப்பு – 20, ஐடிஐ – 27) மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஹைஎனர்ஜி ப்ராஜெக்டைல் தொழிற்சாலையில் 75 (ஐடிஐ) காலிப் பணியிடங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

யந்த்ரா இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில்

  • 10-ம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • ஐடிஐ இல்லாத பணியிடங்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • ஐடிஐ தகுதி உள்ள பணியிடங்களுக்கு NCVT அல்லது SCVT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 14 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அபாயகரமான தொழில்களுக்கான சில பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்,
  • OBC – 3 ஆண்டுகள்,
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000 ரூபாயும், ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் 7000 ரூபாயும் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாகக் கிடைக்கும்.

இப்பணியிடங்களுக்கான தேர்வு, விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும். குறிப்பாக, 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

  • ST/SC/Ex-s/Women/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

யந்த்ரா இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.10.2024 முதல் 30.11.2024 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் யந்த்ரா இந்தியா லிமிடெட்டில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மேற்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment