Nagapattinam DCPU Recruitment 2026

12வது தேர்ச்சி.. தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – சம்பளம்: ரூ.13,240/- || தேர்வு கிடையாது Nagapattinam DCPU Recruitment 2026

Nagapattinam DCPU Recruitment 2026: தமிழ்நாடு அரசு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலகம்
Coimbatore District Child Protection Unit
காலியிடங்கள்01
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி08.01.2026
பணியிடம்நாகப்பட்டினம் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nagapattinam.nic.in/

தமிழ்நாடு அரசு, நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (Nagapattinam District Child Protection Unit – DCPU) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு, நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026-இல் Assistant cum Data Entry Operator பணிக்குத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி: கணினி துறையில் டிப்ளோமா அல்லது சான்றிதழ் படிப்பு (Diploma/Certificate in Computer Applications) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதியில், விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) காலியாக உள்ள Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 13,240/- வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 24.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.01.2026

தமிழ்நாடு அரசு நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nagapattinam.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611003.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top