Customs Mumbai Recruitment 2025: மத்திய அரசு சுங்கத் துறையில் காலியாக உள்ள 22 கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Customs Mumbai Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | மும்பை சுங்கத்துறை |
| காலியிடங்கள் | 22 |
| பணிகள் | கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 16.11.2025 |
| பணியிடம் | மும்பை, இந்தியா |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mumbaicustomszone1.gov.in/ |
Customs Mumbai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு சுங்கத் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடம் |
| கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) | 22 |
| மொத்தம் | 22 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
| பதவியின் பெயர் | கல்வி |
| கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
Customs Mumbai Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) | 18 வயது முதல் 25 வயது வரை |
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
Customs Mumbai Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| கேண்டீன் உதவியாளர் (Canteen Attendant) | மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை |
Customs Mumbai Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய அரசு சுங்கத் துறை கேண்டீன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
Customs Mumbai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
விண்ணப்பப் படிவம்: விண்ணப்பத்தை உரிய விண்ணப்பப் படிவத்தில் (Application Form) மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: விண்ணப்பப் படிவத்துடன், பின்வரும் சான்றிதழ்களின் சுய-சான்றொப்பமிடப்பட்ட நகல்களை (self-attested photocopies) இணைக்க வேண்டும்:
- பத்தாம் வகுப்பு (Matriculation) அல்லது அதற்கு சமமான சான்றிதழ்.
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet).
- தகுதி நிலைக்கு ஏற்ற சாதிச் சான்றிதழ் (SC/ ST/ OBC/ EWS சான்றிதழ்).
அனுப்புதல்:
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு, சரியான வடிவத்தில் இருக்க வேண்டும்.
- விண்ணப்பத்தை அனுப்பும் உறையின் (Envelope) மீது, “APPLICATION FOR THE POST OF CANTEEN ATTENDANT” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- இந்த விண்ணப்பங்கள் தபாலில் (by post) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கடைசித் தேதி மற்றும் முகவரி:
- விண்ணப்பங்கள், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சென்றடைய வேண்டும்.
முக்கியக் குறிப்பு: சரியான வடிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய தேதிக்குள் தபாலில் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







