Chennai DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள 20 Supervisor (மேற்பார்வையாளர்), Project Coordinator (திட்ட ஒருங்கிணைப்பாளர்), Case Worker (வழக்கு பணியாளர்), Counsellor (ஆலோசகர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Chennai DCPU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
காலியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 26.10.2025 |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennai.nic.in/ |
Tamilnadu DCPU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Project Coordinator (திட்ட ஒருங்கிணைப்பாளர்) | 01 |
Supervisor (மேற்பார்வையாளர்) | 08 |
Counsellor (ஆலோசகர்) | 01 |
Case Worker (வழக்கு பணியாளர்) | 10 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chennai DCPU Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி பெயர் | கல்வித் தகுதி |
Case Worker (வழக்கு பணியாளர்) | அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. நல்ல தொடர்புத் திறன் அவசியம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். |
Project Coordinator (திட்ட ஒருங்கிணைப்பாளர்) | சமூகப் பணி/சமூகவியல்/சிறார் மேம்பாடு/சட்டம்/பொது சுகாதாரம் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம். அல்லது, அதே பிரிவுகளில் பட்டப்படிப்புடன் (Graduate) திட்ட செயலாக்கம்/கண்காணிப்பில் 2 ஆண்டுகள் அனுபவம். கணினி அறிவு அவசியம். |
Supervisor (மேற்பார்வையாளர்) | சமூகப் பணி/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/சமூகவியல்/சமூக அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Counsellor (ஆலோசகர்) | சமூகப் பணி/சமூகவியல்/மனோதத்துவவியல்/பொது சுகாதாரம்/ஆலோசனைப் பிரிவுகளில் பட்டம். அல்லது, ஆலோசனை மற்றும் தகவல் தொடர்பில் முதுகலை டிப்ளமோ (PG Diploma). |
Chennai DCPU Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Chennai DCPU Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் (மாதம்) |
Project Coordinator (திட்ட ஒருங்கிணைப்பாளர்) | Rs.28,000/- |
Supervisor (மேற்பார்வையாளர்) | Rs.21,000/- |
Counsellor (ஆலோசகர்) | Rs.23,000/- |
Case Worker (வழக்கு பணியாளர்) | Rs.18,000/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.10.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.10.2025
Chennai DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Chennai – South No.1, First Floor, New Street, GCC Commercial Complex, Alandur, Chennai – 600016 (Adjacent to RTO Office))
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |