TN Forest Department Recruitment 2025: தமிழ்நாடு வனத்துறை, முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் கோட்டம், தெப்பக்காடு யானை முகாமில் காலியாகவுள்ள 09 காவடி (Elephant Kavady) பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Forest Department Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு வனத்துறை Tamil Nadu Forest Department |
காலியிடங்கள் | 09 |
பணி | காவடி (Elephant Kavady) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.09.2025 |
பணியிடம் | முதுமலை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mudumalaitigerreserve.com/ |
TN Forest Department Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
காவடி (Elephant Kavady) | 09 |
மொத்தம் | 09 |
TN Forest Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன
- தமிழில் பேச தெரிந்தவர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- யானை பராமரிப்பு செய்வதற்கான பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் யானையுடன் பணிபுரிந்த மற்றும் அனுபவமுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கான சான்றாக குடும்ப அட்டை அல்லது பெற்றோர்கள் பணிபுரிந்ததற்கான ஏதேனும் ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் யானை முகாமில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் யானைகளுக்கு பயிற்சி மற்றும் யானைகளை கையாண்டதற்கான அனுபவம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அதற்கான அனுபவச்சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
TN Forest Department Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
TN Forest Department Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தோராயமான மாத சம்பளம் ரூ.15,000 ஆக இருக்கும்.
TN Forest Department Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், பின்வரும் தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Short Listing:
- Interview: தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- Document Verification: நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
- Final Selection: அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN Forest Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், இதற்கான அறிவிப்பு, விண்ணப்ப படிவம் மற்றும் இதற்கான நிபந்தனைகளை www.forests.tn.gov.in, www.mudumalaitigerreserve.com இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது கீழே உள்ள இணைப்பிலிருந்தோ பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டபடி அனைத்து ஆவணங்களையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2025 தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்கவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரபூர்வ அறிவிப்பில் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விண்ணப்பங்கள் கீழ்கண்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2025 தேதி மாலை 5.00 மணிக்குள். இத்தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் அலுவலகம், (Office of the Deputy Director,)
முதுமலை புலிகள் காப்பகம், (Mudumalai Tiger Reserve,)
மொள்ள பாஸ்வாள் வில்லா, (Molla Baswal Villa,)
உதகமண்டலம்- 643 001. (Udhagamandalam – 643 001.)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |