Thursday, September 25, 2025
Home8th Pass Govt Jobs8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை - ரூ.58,100 சம்பளம் || தேர்வு...

8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.58,100 சம்பளம் || தேர்வு கிடையாது! Vellore Highway Dept Recruitment 2025

Vellore Highway Dept Recruitment 2025: தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை, வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2025 ஆகும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்Department of Highways 
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை
காலியிடங்கள்01
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.10.2025
பணியிடம்வேலூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnhighways.tn.gov.in/

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை, வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள்:

அலுவலக உதவியாளர் (Office Assistant): அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மிதிவண்டி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள், 01.07.2025 அன்று 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை அலுவலக உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் குறித்த விவரங்கள்:

  • அலுவலக உதவியாளர் (Office Assistant): ரூ.15,700 – 58,100 (நிலை-1)

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள், நேர்முகத் தேர்வில் (Interview) பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, சாதி இருப்பிடம், முகவரி மற்றும் பணி அனுபவம் போன்ற சுய விவரங்களை குறிப்பிட்டு, இருப்பிட சான்றிதழ் மற்றும் இரண்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெற்றப் பட்டதாரி சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற தகுந்த சான்றிதழ்கள் / படிவங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகமாக, தபால் மூலமாகவோ 23.10.2025 பி.ப. 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற வேண்டும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்த விவரங்கள் தகுதியுடையோரின் (Call Letter) தொலைபேசியில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம், வெல்லக்கண்டு, (VIT எதிரில்), வேலூர் – 632 014.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments