Tiruchirappalli TNSLRM Recruitment 2025: தமிழ்நாடு அரசின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSLRM) கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாக உள்ள பல்வேறு சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 27.09.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tiruchirappalli TNSLRM Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பதவியின் பெயர் | சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 27.09.2025 |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruchirappalli.nic.in/ |
TNSLRM Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSLRM) கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: | காலியிடங்கள் |
சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) | பல்வேறு |
TNSLRM Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSLRM) சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer) பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
- பயிற்சி அனுபவம்: மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
- திறன்கள்: பயிற்சி நடத்துவதற்குத் தேவையான உடல் தகுதி மற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், கைபேசி செயலிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
TNSLRM Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSLRM) சமுதாய வளப் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- குறைந்தபட்ச வயது: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது: இந்த பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
Tiruchirappalli TNSLRM Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் சம்பளம் வழங்கப்படும்.
Tiruchirappalli TNSLRM Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Tiruchirappalli TNSLRM Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
முக்கிய தேதிகள்:
Tiruchirappalli TNSLRM Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025
Tiruchirappalli TNSLRM Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchirappalli.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 19.09.2025 முதல் 27.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
தொடர்புக்கு :
உதவி திட்ட அலுவலர்(CBO), அலைபேசி எண் : 9444094453
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண்: 0431 2412726
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |