BSF Recruitment 2025: இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள 1121 Head Constable (Radio Operator) மற்றும் Head Constable (Radio Mechanic) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 23.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
BSF Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Border Security Force எல்லை பாதுகாப்பு படை |
காலியிடங்கள் | 1121 |
பணிகள் | Head Constable (Radio Operator), Head Constable (Radio Mechanic) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.09.2025 at 11:59 PM |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://rectt.bsf.gov.in/ |
BSF Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Head Constable (Radio Operator): 910 காலியிடங்கள்
- Head Constable (Radio Mechanic): 211 காலியிடங்கள்
மொத்த பணியிடங்கள்: 1121 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BSF Head Constable Recruitment 2025 கல்வித் தகுதி
1. Head Constable (Radio Operator)
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது
- அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டேட்டா பிரிபரேஷன் மற்றும் கணினி சாப்ட்வேர், ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Head Constable (Radio Mechanic)
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது
- அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ், கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டேட்டா பிரிபரேஷன் மற்றும் கணினி சாப்ட்வேர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மெயின்டெனன்ஸ், கம்யூனிகேஷன் எக்யூப்மென்ட் மெயின்டெனன்ஸ், கணினி வன்பொருள், நெட்வொர்க் டெக்னீசியன், மெக்காட்ரானிக்ஸ் அல்லது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
BSF Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
BSF வேலைவாய்ப்பு 2025-க்கான வயது வரம்பு மற்றும் தளர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Head Constable (Radio Operator) | 18 முதல் 25 வயது வரை (23.09.2025 தேதியின்படி). |
Head Constable (Radio Mechanic) | 18 முதல் 25 வயது வரை (23.09.2025 தேதியின்படி). |
வயது தளர்வு
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- முன்னாள் இராணுவ வீரர்கள் (Ex-Servicemen): அரசாங்க கொள்கையின்படி தளர்வுகள் உண்டு.
BSF Head Constable Recruitment 2025 சம்பள விவரங்கள்
BSF வேலைவாய்ப்பு 2025-க்கான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவி | சம்பள விகிதம் |
Head Constable (Radio Operator) | Rs. 25,500 – 81,100/- (Level 4) |
Head Constable (Radio Mechanic) | Rs. 25,500 – 81,100/- (Level 4) |
BSF Recruitment 2025 தேர்வு செயல்முறை
BSF ஆட்சேர்ப்பு 2025-க்கான தேர்வு செயல்முறை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.BSF பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.
முதல் நிலை – PST மற்றும் PET:
- இந்தக் கட்டத்தில், விண்ணப்பதாரர்களின் உடல் தகுதியை அளவிட, உடல் தரத் தேர்வு (Physical Standard Test – PST) மற்றும் உடல் திறன் தேர்வு (Physical Efficiency Test – PET) ஆகியவை நடத்தப்படும்.
- உயரம், மார்பளவு, எடை போன்ற உடல் அளவுகள் சோதிக்கப்படும். ஓட்டம் மற்றும் தாண்டுதல் போன்ற உடற்திறன் சோதனைகளும் இதில் அடங்கும்.
இரண்டாம் நிலை – கணினி வழித் தேர்வு (CBT):
- உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test) எழுத வேண்டும்.
- இந்தத் தேர்வு, விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு மற்றும் திறனாய்வுத் திறன்களை மதிப்பிடும் வகையில் புறநிலை வினாக்கள் (Objective Type Questions) கொண்டதாக இருக்கும்.
மூன்றாம் நிலை – ஆவண சரிபார்ப்பு மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனை:
- கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆவண சரிபார்ப்பு மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
- கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
BSF Recruitment 2025 முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 24.08.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 23.09.2025
விண்ணப்ப கட்டணம்
- பொது மற்றும் OBC பிரிவினர் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
- ST, SC மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
- ஆன்லைன் மூலம் (நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு, அல்லது UPI) கட்டணத்தைச் செலுத்தலாம்.
BSF Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.08.2025 முதல் 23.09.2025 தேதிக்குள் https://rectt.bsf.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிப்பதில் அல்லது அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், BSF DEPARTMENT 919986638753 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |