12வது படித்தவர்களுக்கு ரூ.56100 சம்பளத்தில் UPSC தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை – 406 காலியிடங்கள்! UPSC NDA II Recruitment 2025

UPSC NDA II Recruitment 2025: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் கடற்படை அகாடெமி ஆகியவற்றில் காலியாக உள்ள 406 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.06.2025 20.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Union Public Service Commission
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)
தேசிய பாதுகாப்பு அகாடெமி (NDA)
காலியிடங்கள்406
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி17.06.2025
20.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://upsconline.nic.in/

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு அகாடெமி (National Defence Academy – NDA) பணியிடங்கள்:

Army:

  • மொத்த காலியிடங்கள்: 208
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 10

Navy:

  • மொத்த காலியிடங்கள்: 42
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 6

Air Force (i) Flying:

  • மொத்த காலியிடங்கள்: 92
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 2

Air Force (ii) GD (Tech):

  • மொத்த காலியிடங்கள்: 18
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 2

Air Force (iii) GD (Non-Tech):

  • மொத்த காலியிடங்கள்: 10
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 2

கடற்படை அகாடெமி (Naval Academy) பணியிடங்கள்:

  • மொத்த காலியிடங்கள்: 36
  • பெண்களுக்கான காலியிடங்கள்: 4
  • NDA Army துறை பணிக்கு 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • NDA Air Force and Naval துறை பணிக்கு 12-ம் வகுப்பு/HSC பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2007 முதல் ஜனவரி 1, 2010 வரை பிறந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேசிய பாதுகாப்பு அகாடெமி (NDA) வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்:

  • சம்பளம்: ரூ. 56,100/- முதல் ரூ. 1,77,500/- வரை
  • ஊதிய நிலை (Pay Level): Level 10

NDA தேசிய பாதுகாப்பு அகாடெமி வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் Intelligence and Personality Test ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
CategoryApplication Fee
ST/SC/Female விண்ணப்பதாரர்களுக்குகட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்குRs. 100/- 
கட்டண முறைஆன்லைன்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் (https://upsc.gov.in/) இணையதளம் என்ற இணையதளத்தில் சென்று “Create Account” பட்டனை கிளிக் செய்து Account Create செய்து ஆன்லைன் மூலம் 28.05.2025 முதல் 17.06.2025 20.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment