TNWWHCL Recruitment 2024: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் (Tamil Nadu Working Women’s Hostels Corporation Limited – TNWWHCL) காலியாகவுள்ள தலைமை செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தங்கும் வசதிகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHCL) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், 2020 பிப்ரவரி 6 முதல் சிறப்பு நோக்க வாகனம் (SPV) திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது, சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை செயல் அலுவலர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHCL) |
காலியிடங்கள் | 01 |
பணி | தலைமை செயல் அலுவலர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 05.12.2024 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnwwhcl.in/Careers |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
TNWWHCL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
தலைமை செயல் அலுவலர் (Chief Executive Officer) | 1 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNWWHCL Recruitment 2024 கல்வித் தகுதி
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவொரு துறையிலும் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், Operations Management, Project Management அல்லது Hospitality Industry ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டிருப்பது அவசியமாகும்.
TNWWHCL Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNWWHCL Recruitment 2024 சம்பள விவரங்கள்
இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNWWHCL Recruitment 2024 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNWWHCL Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் 2024-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNWWHCL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnwwhcl.in இலிருந்து அல்லது நேரடியாக இந்த இணைப்பிலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. படிவத்தை முழுமையாக நிரப்பி, கல்வி சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் 05.12.2024 தேதிக்கு முன்னதாக அனுப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட், சமூக நலத்துறை ஆணையாளர் அலுவலகம், 5, காமராஜர் சாலை, லேடி வில்லிங்டன் கல்லூரி, சென்னை – 600005.
விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- அரசு வங்கிகளில் கிளார்க் வேலை – 10277 காலியிடங்கள் || டிகிரி போதும்.. மாதம் ரூ. 64,480 வரை சம்பளம்! IBPS Clerk Recruitment 2025
- சென்னையில் இந்திய விமானப் படை ஆட்சேர்ப்பு முகாம் – 12 வது தேர்ச்சி போதும் || ரூ.30,000 சம்பளம்! Indian Air Force Chennai Agniveer Recruitment Rally 2025
- 12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 45 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! NLC Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 19,900 சம்பளத்தில் மத்திய அரசில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! CSIR IICB Recruitment 2025