AAICLAS Recruitment 2026: இந்திய விமான நிலைய ஆணையத்தில் கீழ் செயல்படும் AAICLAS விமான சரக்கு சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 158 ‘Security Screener(Fresher)’ பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்தவித முன் அனுபவமும் இல்லாத புதியவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றவர்கள் இப்பணிக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் ₹30,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 08.06.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கீழே விரிவாகக் காணலாம்.
AAICLAS Recruitment 2026 – Job Overview
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய விமான நிலைய ஆணையம் சரக்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் AAICLAS – AAI Cargo Logistics and Allied Services Company Limited |
| காலியிடங்கள் | 158 |
| பணி | Security Screener (Fresher) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 08.06.2026 |
| பணியிடம் | Trichy, Calicut, Udaipur, Patna, Kolkata & Dehradun |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.aaiclas.aero/ |
AAICLAS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையம் AAICLAS விமான சரக்கு சேவைகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| Security Screener (Fresher) செக்யூரிட்டி ஸ்க்ரீனர் | 158 |
AAICLAS (AAI Cargo Logistics and Allied Services Company Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Security Screener (Fresher) பணியிடங்கள் மற்றும் விமான நிலைய வாரியான காலிப்பணியிட விவரங்கள் இதோ:
| பதவியின் பெயர் (Post Name) | விமான நிலையம் / பணியிடம் (Airport/Place of Posting) | காலிப்பணியிடங்கள் (Vacancies) |
| Security Screener (Fresher) | பாட்னா (Patna) | 37 |
| Security Screener (Fresher) | உதயப்பூர் (Udaipur) | 34 |
| Security Screener (Fresher) | திருச்சி (Trichy) | 28 |
| Security Screener (Fresher) | கொல்கத்தா (Kolkata) | 25 |
| Security Screener (Fresher) | டேராடூன் (Dehradun) | 17 |
| Security Screener (Fresher) | கோழிக்கோடு (Calicut) | 17 |
| மொத்த காலியிடங்கள் | 158 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
AAICLAS Recruitment 2026 கல்வித் தகுதி
இந்திய விமான நிலைய ஆணையம் AAICLAS விமான சரக்கு சேவைகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:
| பணியின் பெயர் | கல்வித் தகுதி |
| Security Screener (Fresher) செக்யூரிட்டி ஸ்க்ரீனர் | (அ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – பொது/EWS/OBC விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். – ST/SC விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு எந்தவித முன் அனுபவமும் (Experience) தேவையில்லை; புதியவர்கள் (Freshers) தாராளமாக விண்ணப்பிக்கலாம். |
AAICLAS Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
AAICLAS நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது:
01.05.2026 அன்று விண்ணப்பதாரர்களின் வயது 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி பின்வரும் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகிறது:
- SC / ST பிரிவினர்: +5 ஆண்டுகள் (32 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
- OBC (NCL) பிரிவினர்: +3 ஆண்டுகள் (30 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
- மாற்றுத்திறனாளிகள் (PwD): +10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு
- முன்னாள் ராணுவத்தினர்: இந்திய அரசு கொள்கையின்படி தளர்வு
AAICLAS Security Screener Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பணியின் பெயர் | சம்பளம் |
| Security Screener (Fresher) செக்யூரிட்டி ஸ்க்ரீனர் | முதல் வருடம்: ரூ. 30,000/- இரண்டாம் வருடம்: ரூ. 32,000/-மூன்றாம் வருடம்: ரூ. 34,000/- |
AAICLAS Security Screener Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் செயல்படும் AAICLAS விமான சரக்கு சேவைகள் நிறுவனத்தின் ‘Security Screener (Fresher)’ பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting): ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முதலில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களின் சுருக்கப் பட்டியல் (Shortlist) தயார் செய்யப்படும்.
- நேர்காணல் (Online Interview): சுருக்கப் பட்டியலில் இடம்பெறும் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் (Interview) நடத்தப்பட்டு, இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
Security Screener (Fresher) பதவிக்கு
- ST/ SC/ Female/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – Rs.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.750/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தொடங்கும் தேதி: 18.05.2026
- ஆன்லைன் விண்ணப்பப் படிவம் முடியும் தேதி: 08.06.2026
AAICLAS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விமான நிலைய ஆணையம் AAICLAS விமான சரக்கு சேவைகள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Security Screener (Fresher) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் 18.05.2026 முதல் 08.06.2026 ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது அடிப்படை விவரங்களை வழங்கி ‘New User’ ஆகப் பதிவு (Register) செய்துகொள்ள வேண்டும்; மேலும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது கல்வித்தகுதி சான்றிதழ், வகுப்புப் பிரிவு சான்றிதழ் (Community Certificate), அடையாள அட்டை, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது கையொப்பம் ஆகிய ஆவணங்களைச் சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பரிசீலனைக்குப் பிறகு அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் தங்களது மருத்துவப் பரிசோதனை சான்றிதழை (Medical Fitness Certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்குக் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் (Official Notification) படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| Security Screener (Fresher) அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |


