TNSLRM Community Bank Coordinator Recruitment 2026

12ஆம் வகுப்பு தேர்ச்சி… தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – 236 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! TNSLRM Community Bank Coordinator Recruitment 2026

TNSLRM Community Bank Coordinator Recruitment 2026: TNSRLM Community Bank Coordinator Recruitment 2026: தமிழ்நாடு அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சார்பில் காலியாக உள்ள Community Bank Coordinator (சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்) பணிக்காக மொத்தம் 236 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது Resume மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்களை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
காலியிடங்கள்236
பதவியின் பெயர்சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி03.06.2026 & 29.05.2026
பணியிடம்சேலம் மாவட்டம் & காஞ்சிபுரம் மாவட்டம்

தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

  • சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator) – 236 காலியிடங்கள்

மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:

மாவட்டம்காலியிடங்கள்
சேலம் மாவட்டம்197 காலியிடங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம்39 காலியிடங்கள்
மொத்த காலியிடம்236

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க, எழுத மற்றும் அடிப்படை கணக்கீடு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சுய உதவி குழு உறுப்பினராக செயல்பட்ட அனுபவம் அவசியம்.
  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சுய உதவி குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.
  • கணினி அறிவு மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • Android மொபைல் பயன்படுத்தும் திறன், SMS மற்றும் WhatsApp செயல்படுத்தும் திறன் இருக்க வேண்டும்.
  • வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் கடன் விண்ணப்பங்கள் நிரப்பிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • சிறந்த தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • காலிப்பணியிடம் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன

பதவியின் பெயர்வயது வரம்பு விவரங்கள்
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator)விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

TNSRLM தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய வரம்பு பின்வருமாறு:

பதவியின் பெயர்சம்பளம்
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator)₹2,500 மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம்

TNSRLM தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2026
  • சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2026
  • காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2026

தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின் கீழ் Community Bank Coordinator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களுடன் கூடிய Resume / Bio-Data தயாரித்து அனுப்ப வேண்டும்.

Resume-ல் விண்ணப்பதாரரின் முழுப்பெயர், தந்தை / கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சுய உதவி குழு அனுபவம், பணியாற்றிய அனுபவம் மற்றும் பிற திறன்கள் போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், Resume-உடன் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சுய உதவி குழு உறுப்பினர் சான்று மற்றும் தேவையான பிற ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை (Photocopies) இணைக்க வேண்டும்:

  • இருப்பிடச் சான்று / ஆதார் கார்டு நகல்.
  • கல்வித் தகுதி சான்றிதழ்கள் (Educational Certificates).
  • சாதிச் சான்றிதழ் (Community Certificate).
  • முன்னனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் (Experience Certificate).

பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை ஒரு உறையில் வைத்து, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பம் கடைசி தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்புவது மிகவும் அவசியம்.

சேலம் மாவட்டம் – 197 காலியிடங்கள்

விவரம்தகவல்
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
கடைசி தேதி29.05.2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிசம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அனுப்ப வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் – 39 காலியிடங்கள்

விவரம்தகவல்
காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
கடைசி தேதி03.06.2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிஇணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை

விவரம்தகவல்
விண்ணப்பிக்கும் முறைதகுதி உள்ள நபர்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நேரிலோ அல்லது தபாலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்புவிண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top