Villupuram DCDRC Office Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Villupuram DCDRC Office Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு |
காலியிடங்கள் | 01 |
பணிகள் | அலுவலக உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 25.07.2025 |
பணியிடம் | விழுப்புரம் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://viluppuram.nic.in/ |
Villupuram DCDRC Office Assistant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
அலுவலக உதவியாளர்/ Office Assistant | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Villupuram DCDRC Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
அலுவலக உதவியாளர்/ Office Assistant | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Villupuram DCDRC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பின் தேதியின்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Villupuram DCDRC Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
அலுவலக உதவியாளர்/ Office Assistant | மாதம் Rs.15,700 – 58,100/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Villupuram DCDRC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2025
Villupuram DCDRC Office Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவத்தை https://viluppuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்விச் சான்றிதழ்களை இணைத்து, “தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நகராட்சி சமுதாயக்கூடம், கிழக்கு பாண்டி ரோடு, விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையம் அருகில், விழுப்புரம் 605 602.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.07.2025 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |