TNRD Office Assistant Recruitment 2023: தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!

0
5543
TNRD Office Assistant Recruitment 2023: தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!
TNRD Office Assistant Recruitment 2023: தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!

TNRD Office Assistant Recruitment 2023:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ராஜபாளையத்தில் புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியைப் பற்றிய முழுமையான தகவல்களை கீழே சேகரித்துள்ளோம். விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

TNRD Office Assistant Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்TNRD
காலியிடங்கள் 03
பணிஅலுவலக உதவியாளர்
கடைசி தேதி31.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்தம் 3 பணியிடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 08ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள், அதிகபட்சம் 32 ஆண்டுகள்.

சம்பள விவரம்:

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் 31, 2023க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here