Tiruvannamalai DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 153 Data Entry Operator, Multipurpose Hospital Worker, Security , Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tiruvannamalai DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) |
காலியிடங்கள் | 153 |
பணிகள் | Data Entry Operator, Multipurpose Hospital Worker, Security , Driver |
சம்பளம் | மாதத்திற்கு ரூ. 8,000 – 18,000/- |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 06.08.2025 |
பணியிடம் | திருவண்ணாமலை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvannamalai.nic.in/ |
Tiruvannamalai DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Staff Nurse (ஸ்டாஃப் நர்ஸ்) | 139 |
Pharmacist (பார்மசிஸ்ட்) | 03 |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) | 03 |
Radiographer (ரேடியோகிராஃபர்) | 01 |
Multipurpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்) | 04 |
Security (பாதுகாப்புப் பணியாளர்) | 01 |
Driver (ஓட்டுநர்) | 02 |
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Staff Nurse (ஸ்டாஃப் நர்ஸ்) | இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் DME-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் DGNM/ B.Sc (Nursing) தேர்ச்சி. தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். |
Pharmacist (பார்மசிஸ்ட்) | D.Pharm/B.Pharm தேர்ச்சி. |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) | கணினிப் பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாட்டில் டிப்ளமோவுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. |
Radiographer (ரேடியோகிராஃபர்) | DME-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ரேடியோ கண்டறிதல் தொழில்நுட்பத்தில் (radio diagnosis technology) இரண்டு ஆண்டு டிப்ளமோ அல்லது ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜியில் B.Sc. |
Multipurpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
Security (பாதுகாப்புப் பணியாளர்) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
Driver (ஓட்டுநர்) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 3 ஆண்டுகள் அனுபவம். |
Tiruvannamalai DHS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Staff Nurse (ஸ்டாஃப் நர்ஸ்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Pharmacist (பார்மசிஸ்ட்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Radiographer (ரேடியோகிராஃபர்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Multipurpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Security (பாதுகாப்புப் பணியாளர்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
Driver (ஓட்டுநர்) | 35 வயதுக்கு மேற்படாதவர் |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Staff Nurse (ஸ்டாஃப் நர்ஸ்) | ரூ. 18,000/- |
Pharmacist (பார்மசிஸ்ட்) | ரூ. 15,000/- |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) | ரூ. 13,500/- |
Radiographer (ரேடியோகிராஃபர்) | ரூ. 13,500/- |
Multipurpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்) | ரூ. 8,500/- |
Security (பாதுகாப்புப் பணியாளர்) | ரூ. 8,500/- |
Driver (ஓட்டுநர்) | ரூ. 8,000/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Tiruvannamalai DHS Recruitment 2025 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2025
Tiruvannamalai DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/-ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயல்பாட்டு செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |