SBI CBO Recruitment 2026

SBI வங்கி வேலைவாய்ப்பு – 2050 காலியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.48,480/- SBI CBO Recruitment 2026

SBI CBO Recruitment 2026: வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலான இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பது பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI) தான். நீங்களும் எஸ்பிஐ வங்கியில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். பாரத ஸ்டேட் வங்கி, 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான SBI CBO Recruitment 2026 அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.02.2026 தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்பாரத ஸ்டேட் வங்கி
State Bank of India
காலியிடங்கள்2050
பணிகள்Circle Based Officers (CBO)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி18.02.2026
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sbi.co.in/

பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Circle Based Officers (CBO) – 2050 காலியிடங்கள்

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாரத ஸ்டேட் வங்கி Circle Based Officers பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: மேலும் Degrees in Engineering, medicine, cost accounting, or chartered accounting முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) Circle Based Officers பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர்
விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen)
அரசின் கொள்கைப்படி
தளர்வு அளிக்கப்படும்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2026 Circle Based Officers பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். இது ஆரம்ப ஊதியம் மட்டுமே. சம்பளம் மற்றும் இதர படிகள், சலுகைகள் ஆகியவை வங்கியின் விதிமுறைகளின்படி மாறுபடலாம். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2026 Circle Based Officers பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:

  1. Online Test (ஆன்லைன் தேர்வு)
    விண்ணப்பதாரர்களின் பொது அறிவு, வங்கி அறிவு, தர்க்க திறன் மற்றும் ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்ய ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
  2. Screening (திரைமறைவு / ஆவணத் தேர்வு)
    ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்ப விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தகுதியான விண்ணப்பங்கள் திரைமறைவு செய்யப்படும்.
  3. Interview (நேர்காணல்)
    Screening கட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதில் தொழில்நுட்ப அறிவு, அனுபவம் மற்றும் தொடர்புத் திறன் மதிப்பீடு செய்யப்படும்.
  4. Local Language Proficiency Test (உள்ளூர் மொழித் திறன் தேர்வு)
    விண்ணப்பித்த Circle-க்கு தொடர்புடைய உள்ளூர் மொழியில் வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் திறன் இருப்பதை உறுதி செய்ய இந்தத் தேர்வு நடத்தப்படும்.

இந்த அனைத்து கட்டங்களிலும் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் SBI Circle Based Officers பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 29.01.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 18.02.2026
  • Date of Examination: March 2026 

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.01.2026 முதல் 18.02.2026 தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top