RITES Recruitment 2025

ரயில்வே துறையின் கீழ் ரயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – 600 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.29,735/- RITES Recruitment 2025

RITES Recruitment 2025: மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனமானது, தற்போது காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் 12.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின் மூலம், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார், தேவையான கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது போன்ற முழுமையான விவரங்களை அறியலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம்
RITES (Rail India Technical and Economic Service)
காலியிடங்கள்600
பணிSenior Technical Assistant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.11.2025
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rites.com/Career

ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Senior Technical Assistant600
மொத்தம்600

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தின் Senior Technical Assistant (மூத்த தொழில்நுட்ப உதவியாளர்) பணிக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கீழ்க்கண்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • B.Sc. in Chemistry (வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம்) அல்லது
  • சிவில் இன்ஜினியரிங்கில் முழுநேர டிப்ளமோ (Full time Diploma in Civil Engineering) அல்லது
  • எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் முழுநேர டிப்ளமோ அல்லது
  • மெக்கானிக்கல்/ புரொடக்ஷன்/ புரொடக்ஷன் & இண்டஸ்ட்ரியல்/ மேனுஃபாக்சரிங்/ மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல் பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ அல்லது
  • கெமிக்கல்/ பெட்ரோகெமிக்கல்/ கெமிக்கல் டெக்னாலஜி/ பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி/ பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி/ உணவு/ ஜவுளி/ தோல் டெக்னாலஜி ஆகியவற்றில் முழுநேர டிப்ளமோ.

ரயில்வே துறையின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத் தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கலாம். இது தொடர்பான மேலும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு தளர்வு (Age Relaxation)

பிரிவு (Category)வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
SC / ST (பட்டியலினத்தவர் / பழங்குடியினர்)5 ஆண்டுகள்
OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) (மாற்றுத்திறனாளிகள் – பொது / பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர்)10 ஆண்டுகள்
PwBD (SC / ST) (மாற்றுத்திறனாளிகள் – பட்டியலினத்தவர் / பழங்குடியினர்)15 ஆண்டுகள்
PwBD (OBC) (மாற்றுத்திறனாளிகள் – இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)13 ஆண்டுகள்

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் Senior Technical Assistant பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,735/- சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே துறை RITES நிறுவனம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Written Test (எழுத்துத் தேர்வு)
  2. Document Scrutiny (ஆவணச் சரிபார்ப்பு)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பக் கட்டணங்களைப் பொறுத்தவரை, பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் இராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த மேலே குறிப்பிட்ட பிரிவுகளைத் தவிர்த்த மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் (Others Candidates) ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2025

ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.10.2025 முதல் 12.11.2025 தேதிக்குள் https://rites.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top