NLC Recruitment 2026

தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் வேலை – 575 காலிப்பணியிடங்கள்; மாதம் ரூ.12,524 சம்பளம்! NLC Recruitment 2026

NLC Recruitment 2026: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited) காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.01.2026 தேதியோ அல்லது அதற்கு முன்னரோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி)
NLC India Limited
காலியிடங்கள்575
பணிகள்Graduate Apprentice, Technician Apprentice
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.01.2026
பணியிடம்நெய்வேலி,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nlcindia.in/

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Graduate Apprentice357
Technician Apprentice218

Table 1: Graduate Apprentice Vacancies

These positions are for candidates holding a Full-Time Degree in the respective engineering disciplines.

DisciplineNumber of Posts
Mechanical Engineering94
Electrical Engineering93
Civil Engineering34
Instrumentation Engineering14
Chemical Engineering09
Mining Engineering49
Computer Science Engineering49
Electronics & Communication Engineering09
Information Technology06
Total Graduate Vacancies357

Table 2: Technician Apprentice Vacancies

These positions are for candidates holding a Full-Time Diploma or specific professional certificates.

Discipline / SubjectNumber of Posts
Mechanical Engineering57
Electrical Engineering66
Civil Engineering15
Instrumentation Engineering10
Mining Engineering32
Computer Science Engineering13
Electronics & Communication Engineering10
Medical Lab Technology (DMLT)05
Catering Technology & Hotel Management05
Pharmacist (D.Pharm)05
Total Technician Vacancies218

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்கல்வி தகுதி
Graduate Apprenticeஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழுநேர (Degree in Engineering) பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprenticeஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழுநேர (Diploma in Engineering) பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதி வரம்புகள் (Other Eligibility Requirements):

  • இருப்பிடம்: விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • தேர்ச்சி பெற்ற வருடம்: விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதித் தேர்வில் (Degree/Diploma) 2021, 2022, 2023, 2024 அல்லது 2025 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்சம்பளம்
Graduate Apprenticeமாதம் Rs.15028/-
Technician Apprenticeமாதம் Rs.12524/- 

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு Merit List மற்றும் Certificate Verification ஆகிய இரண்டு கட்ட முறைகள் பின்பற்றப்படும். இந்த இரண்டு கட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

DetailsDate and Time
விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்19.12.2025, காலை 10.00 மணி
விண்ணப்பிக்க கடைசி நாள்02.01.2026, மாலை 05.00 மணி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலை (Hard Copy) சமர்ப்பிக்க கடைசி நாள்09.01.2026, மாலை 05.00 மணி
சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு17.01.2026
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதிகள்21.01.2026 முதல் 23.01.2026 வரை
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு04.02.2026
பணியில் சேரும் நாள் (Joining Date)GAT: 10.02.2026
TAT: 16.02.2026
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.12.2025 (காலை 10:00) முதல் 02.01.2026 (மாலை 05:00) வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படி 1: ஆன்லைன் விண்ணப்பம் (Online Application)

  1. www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. “Careers” பக்கத்தில் உள்ள “Apply Online” பட்டனை கிளிக் செய்யவும்.
  3. தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
  4. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Registration Form) எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

படி 2: விண்ணப்ப நகலை அனுப்புதல் (Hard Copy Submission)

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, தேவையான ஆவணங்களின் நகல்களை (Self Attested) இணைத்து கீழ்வரும் முகவரிக்கு 09.01.2026 (மாலை 5:00 மணிக்குள்) நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli – 607 803.

தேவையான ஆவணங்கள் (Checklist of Documents)

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் (சுயசான்றொப்பமிடப்பட்ட நகல்கள்):

  1. கையொப்பமிடப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப நகல்.
  2. பட்டய/பட்டப்படிப்பு சான்றிதழ் (Degree / Provisional Certificate).
  3. அனைத்து செமஸ்டர் மதிப்பெண் பட்டியல்கள் (Chronological Order).
  4. சதவீதம் (Percentage) கணக்கிடும் முறை குறித்த சான்றிதழ் (பல்கலைக்கழகம் வழங்கியது).
  5. SSLC மற்றும் HSC மதிப்பெண் பட்டியல்கள்.
  6. மாற்றுச் சான்றிதழ் (TC).
  7. சாதிச் சான்றிதழ் (SC / ST / OBC / EWS பிரிவினர் மட்டும்).
  8. குடும்ப அட்டை (Ration Card) அல்லது வாக்காளர் அடையாள அட்டை.
  9. ஆதார் அட்டை.
  10. மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்தினால்).
  11. முன்னாள் ராணுவத்தினர் வாரிசு என்பதற்கான சான்றிதழ் (பொருந்தினால்).
  12. பொறியியல் மதிப்பெண் சதவீதத்தை விளக்கும் படிவம் (இணையதளத்தில் கிடைக்கும்).
    அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
    ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
    Percentage arriving format for ApprenticeClick Here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
    WhatsApp Channel Join Now
    Telegram Channel Join Now
    Instagram Channel Join Now

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top