12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 45 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! NLC Recruitment 2025

NLC Recruitment 2025: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited – NLC) அப்ரண்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி)
NLC India Limited
காலியிடங்கள்45
பணிகள்Medical Lab Technician (Pathology),
Medical Lab Technician (Radiology),
Conveyor Belt Vulcaniser
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.08.2025
பணியிடம்நெய்வேலி,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nlcindia.in/

என்எல்சி இந்தியா அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Medical Lab Technician (Pathology)15
Medical Lab Technician (Radiology)10
Conveyor Belt Vulcaniser20
மொத்தம்45

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

என்எல்சி இந்தியா அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்கல்வித் தகுதி
Medical Lab Technician (Pathology)+2 (HSc.,) தேர்வில் உயிரியல் (அல்லது) தாவரவியல் & விலங்கியலை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
Medical Lab Technician (Radiology)+2 (HSc.,) தேர்வில் உயிரியல் (அல்லது) தாவரவியல் & விலங்கியலை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
Conveyor Belt Vulcaniser (ஆண்கள் மட்டும்)+2 (HSc.,) தேர்வு தேர்ச்சி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் (பிறந்த தேதி 01.04.2007 அன்று அல்லது அதற்கு முன் இருக்க வேண்டும்).

என்எல்சி இந்தியா அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள்:

  • முதல் ஆண்டு: ரூ. 8,766/-
  • அடுத்த மூன்று மாதங்கள்: ரூ. 10,019/-

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  1. தகுதி பட்டியல் (Merit List)
  2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 28.07.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 14.08.2025 at 05.00 PM
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. என்எல்சி இந்தியா v வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் nlcindia.in இணையதளத்திற்குச் சென்று CAREERS > JOB பகுதியைக் கிளிக் செய்யவும்.
  2. Trainees & Apprentices பிரிவில் Advt.No. L&DC/02A/2025 விளம்பரத்தின் கீழ் Apply Online (Trade apprentice) இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. 28.07.2025 காலை 10:00 மணி முதல் 14.08.2025 மாலை 5:00 மணிக்குள் nlcindia.in இணையதளத்தில் ONLINE REGISTRATION FORM-ஐ பூர்த்தி செய்து, விண்ணப்பப்படிவத்தின் PRINT எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான நகல்களை இணைத்து 20.08.2025 மாலை 5:00 மணிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள Collection box-இல் சமர்ப்பிக்க வேண்டும்.முகவரி: பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,என்.எல்.சி இந்திய நிறுவனம்,வட்டம் – 20, நெய்வேலி – 607803.
  5. அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் 03.09.2025 அன்று nlcindia.in இணையதளத்தில் வெளியாகும்.
  6. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி உள்ளவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தோராயமாக 10.09.2025 அன்று நடைபெறும்.
  7. பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் 22.09.2025 அன்று nlcindia.in இணையதளத்தில் வெளியாகும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தோராயமாக 03.10.2025 அன்று சேர்க்கைக்கு அழைக்கப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment