NLC India Limited Recruitment 2026

தேர்வு கிடையாது…என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 607 காலியிடங்கள்; மாதம் ரூ.11,040 சம்பளம்! NLC India Limited Recruitment 2026

NLC India Limited Recruitment 2026: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited) காலியாக உள்ள 607 அப்ரண்டிஸ் (Trade Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 25.02.2026 தேதியோ அல்லது அதற்கு முன்னரோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி)
NLC India Limited
காலியிடங்கள்607
பணிகள்அப்ரண்டிஸ் (Trade Apprentices)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மற்றும் தபால் மூலம்
கடைசி தேதி25.02.2026 at 05.00 PM
பணியிடம்நெய்வேலி,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nlcindia.in/

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அப்ரண்டிஸ் (Trade Apprentices) – 607 காலியிடங்கள்

Trade Wise Vacancy Details:

பணி விவரம் (Trade Name)பணியிடங்களின் எண்ணிக்கை (No. of Posts)
எலக்ட்ரீஷியன் (Electrician)114
வெல்டர் (Welder)105
பிட்டர் (Fitter)104
மெக்கானிக் – மோட்டார் வாகனம் (Mechanic – Motor Vehicle)103
வயர்மேன் (Wireman)88
டர்னர் (Turner)38
கோபா – கணினி ஆபரேட்டர் (COPA)18
சுருக்கெழுத்தர் (Stenographer)14
பிளம்பர் (Plumber)05
மௌல்டர் (Moulder)05
தச்சர் (Carpenter)05
மெக்கானிக் – டீசல் (Mechanic – Diesel)04
ஏசி மெக்கானிக் (Refrigeration & Air Cond.)04
மொத்தம் (Total)607

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்கல்வி தகுதி
அப்ரண்டிஸ் (Trade Apprentices)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் NLC நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.01.2026 அன்றைய தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு கணக்கிடப்படும் இறுதி நாளாக 25.02.2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (OBC) விண்ணப்பதாரர்கள், மத்திய அரசின் விதிமுறைப்படி 01.04.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட செல்லத்தக்க OBC சான்றிதழை (Non-Creamy Layer) சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தமிழக அரசின் BC/MBC சான்றிதழ்கள் மத்திய அரசின் இந்தப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்சம்பளம்
அப்ரண்டிஸ் (Trade Apprentices)மாதம் Rs. 11,040/-

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு Merit List மற்றும் Certificate Verification ஆகிய இரண்டு கட்ட முறைகள் பின்பற்றப்படும். இந்த இரண்டு கட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 12.02.2026 காலை 10.00 மணி
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2026 மாலை 05.00 மணி
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் தபால் என இரண்டு நிலைகளிலும் விண்ணப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் இதோ:

  1. ஆன்லைன் பதிவு: முதலில் NLC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. முக்கிய தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 12.02.2026 காலை 10.00 மணிக்கு தொடங்கி, 25.02.2026 மாலை 05.00 மணியுடன் நிறைவடையும்.
  3. நகல் எடுத்தல்: ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தவுடன், அதன் ஒரு நகலை (Printout) எடுத்துக் கொள்ளவும்.
  4. கையொப்பம் மற்றும் சமர்ப்பித்தல்: அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். இதனை கீழே உள்ள முகவரியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ (Collection Box) அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Learning and Development Centre, NLC India Limited, Block-20, Neyveli – 607803.

இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:

விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகல்களைத் தவறாமல் இணைக்கவும்:

  • கல்விச் சான்றிதழ் (PNTC / NTC).
  • ITI மதிப்பெண் பட்டியல்.
  • பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்).
  • மேல்நிலை கல்வி (HSC / +2) மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்.
  • பருவமுறை (Semester-wise) அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்.
  • மாற்றுச் சான்றிதழ் (TC).
  • ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை.
  • சமூகச் சான்றிதழ் (SC/ST/EWS/OBC-NCL பிரிவினர் மட்டும்).
  • முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் (பொருந்துமெனில்).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top