NFL Recruitment 2023: மத்திய அரசின் தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணியிடங்கள் பணியிடங்களை நிரப்பவுள்ளது. விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.56,500 வரை சம்பளம் பெறுவார்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேசிய உர லிமிடெட் (National Fertilizers limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் உரங்கள் மற்றும் இரசாயன அமைச்சகத்தின் கீழ் உள்ளது.நிறுவனத்தில் 5 அம்மோனியா-யூரியா ஆலைகள் உள்ளன. அதன்படி, பஞ்சாபில் உள்ள நங்கல், பதிண்டா, ஹரியானாவில் பானிபட் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் விஜய்பூர் ஆகிய இடங்களில் இரண்டு ஆலைகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿 |
Content
NFL Recruitment 2023 Overview
Description | Details |
வேலை பிரிவு | Central Government Jobs |
துறைகள் | தேசிய உர லிமிடெட் நிறுவனம் NFL |
காலியிடங்கள் | 15 |
பணி | அக்கவுண்ட் அசிஸ்டென்ட் |
கடைசி தேதி | 01.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | |
விண்ணப்ப படிவம் |
NFL காலிப்பணியிடங்கள்:
தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பதவிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தலாம். சமீபத்திய அறிவிப்பின்படி, நங்கல் பிரிவில் ஒருவர், பதிண்டா பிரிவில் ஒருவர், மார்க்கெட்டிங் பிரிவில் 5 பேர், தலைமை அலுவலகத்தில் 5 பேர், விஜய்பூர் பிரிவில் 3 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
NFL Recruitment 2023 கல்வித் தகுதி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிகாம் (Bcom) படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச காலம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் தளர்வுகள் SC மற்றும் ST பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும், OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் பொருந்தும்.
சம்பள விவரங்கள்:
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.23,000 வழங்கப்படும். அதிகபட்ச தொகை 56,500 ரூபாய்.பதவியைப் பொறுத்து சம்பளம் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFL தேர்வு செயல்முறை:
எனவே, விண்ணப்பதாரர்கள் OMR அடிப்படையிலான தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகத்திற்கான OMR தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, துறை சார்ந்த ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
NFL Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் careers.nfl.co.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.