LIC Recruitment 2025: இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
LIC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Life Insurance Corporation of India இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) |
காலியிடங்கள் | 841 |
பணி | Assistant Administrative Officers (AAO) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 08.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://licindia.in/ |
LIC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
எல்.ஐ.சி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பயார் | காலியிடங்கள் |
AAO – Generalist | 350 |
AE (Civil) | 50 |
AE (Electrical) | 31 |
AAO (CA) | 300 |
AAO (CS) | 10 |
AAO (Actuarial) | 30 |
AAO (Insurance Specialist) | 310 |
AAO (Legal) | 30 |
மொத்தம் | 841 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
LIC Recruitment 2025 கல்வித் தகுதி
எல்ஐசி ஆட்சேர்ப்பு 2025 – கல்வித் தகுதி
பதவியின் பயார் | கல்வித் தகுதி |
AAO – பொது (Generalist) | அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
AE (சிவில்) | AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து B.Tech/B.E (சிவில்) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். |
AE (எலக்ட்ரிக்கல்) | AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து B.Tech/B.E (எலக்ட்ரிக்கல்) தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். |
AAO (CA) | இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ICAI இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆர்டிகிள்களை முடித்திருக்க வேண்டும், மற்றும் ICAI-யில் ஒரு அசோசியேட் உறுப்பினராக இருக்க வேண்டும் (சரிபார்ப்புக்கு உறுப்பினர் எண் தேவை). |
AAO (CS) | இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ICSI-யில் தகுதி பெற்ற உறுப்பினராக இருக்க வேண்டும் (சரிபார்ப்புக்கு உறுப்பினர் எண் தேவை). |
AAO (Actuarial) | ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்திய/UK இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவாரீஸ் தேர்வில் குறைந்தது 6 தாள்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (சரிபார்ப்புக்கு உறுப்பினர் எண் தேவை). |
AAO (காப்பீட்டு நிபுணர்) | இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் (வாழ்நாள்) ஃபெலோஷிப் பெற்றிருக்க வேண்டும், மேலும் IRDAI-ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 5+ ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். |
AAO (சட்டம்) | சட்டத்தில் இளங்கலைப் பட்டம் (பொதுப் பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள், SC/ST/PwBD பிரிவினருக்கு 45% மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும், பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும், மேலும் ஒரு வங்கி/நிதி நிறுவனம்/சட்டரீதியான கார்ப்பரேஷன்/நிறுவனம்/மாநில/மத்திய அரசில் வழக்கறிஞராக அல்லது சட்ட அதிகாரியாக 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். |
LIC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
எல்ஐசி ஆட்சேர்ப்பு 2025-க்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- AAO – பொது, AE (சிவில்), AE (எலக்ட்ரிக்கல்), AAO (CS), AAO (ஆக்சுவாரியல்), மற்றும் AAO (காப்பீட்டு நிபுணர்) போன்ற பெரும்பாலான பதவிகளுக்கு வயது வரம்பு 21 முதல் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.08.1995 முதல் 01.08.2004 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.
- AAO (CA) மற்றும் AAO (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு, வயது வரம்பு சற்று அதிகமாக 21 முதல் 32 ஆண்டுகள் ஆகும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.08.1993 முதல் 01.08.2004 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும். அனைத்து வயது கணக்கீடுகளும் 01.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.
வயது வரம்பு தளர்வுகள்
கீழ்க்கண்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் பொருந்தும்:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
- முன்னாள் இராணுவ வீரர்கள்: அரசு கொள்கையின்படி.
LIC Recruitment 2025 சம்பள விவரங்கள்
எல்ஐசி ஆட்சேர்ப்பு 2025-க்கான சம்பளம் விவரங்கள் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பயார் | சம்பளம் |
AAO – பொது (Generalist) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AE (சிவில்) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AE (எலக்ட்ரிக்கல்) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AAO (CA) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AAO (CS) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AAO (ஆக்சுவாரியல்) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AAO (காப்பீட்டு நிபுணர்) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
AAO (சட்டம்) | மாதம் ₹88,635/- சம்பளம் வழங்கப்படும் |
LIC Recruitment 2025 தேர்வு செயல்முறை
எல்.ஐ.சி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Preliminary Examination
- Mains Examination
- Interview
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
LIC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு: s. 85/- + GST + Transaction Charges
- General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு: Rs. 700/- + GST + Transaction Charges
LIC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16.08.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2025
LIC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
எல்.ஐ.சி வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.08.2025 முதல் 08.09.2025 தேதிக்குள் https://licindia.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
AAO Generalist அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
AE AAO Specialist அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |