IOCL Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள பல்வேறு Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IOCL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Indian Oil Corporation Limited |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Junior Engineer/ Officer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://iocl.com/ |
IOCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: பல்வேறு
பதவி பெயர்: Junior Engineer/ Officer
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Junior Engineer/ Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறையில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
IOCL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 26 ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. பட்டியல் சாதி/பழங்குடியினருக்கு (SC/ ST) 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் கொள்கைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
IOCL Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Junior Engineer/ Officer பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ₹30,000 முதல் ₹1,20,000 வரை வழங்கப்படும்.
IOCL Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Junior Engineer/ Officer பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள், கீழ்க்காணும் மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Computer Based Test (CBT)
- Group Discussion (GD) and Group Task (GT)
- Personal Interview (PI)
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: செப்டம்பர் 12, 2025
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 28, 2025
- தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 31, 2025
IOCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://iocl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் செப்டம்பர் 12, 2025 முதல் செப்டம்பர் 28, 2025 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |