Indian Navy Recruitment 2026: இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் பங்களிக்க விரும்பும் துடிப்பான திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 24.02.2026 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
Indian Navy Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்தியக் கடற்படை Indian Navy |
| காலியிடங்கள் | 260 |
| பணிகள் | SSC Officers |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.02.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.joinindiannavy.gov.in/ |
Indian Navy Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகப் பிரிவு (Executive Branch):
- General Service [GS(X)] / Hydro Cadre – பொதுச் சேவை / ஹைட்ரோ கேடர்: 76 Posts
- Pilot – பைலட்: 25 Posts
- Naval Air Operations Officer (NAOO) – கடற்படை வான் செயல்பாட்டு அதிகாரி: 20 Posts
- Air Traffic Controller (ATC) – வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்: 18 Posts
- Logistics – தளவாடங்கள்: 10 Posts
கல்விப் பிரிவு (Education Branch):
- Education – கல்வி அதிகாரி: 15 Posts
தொழில்நுட்பப் பிரிவு (Technical Branch):
- Engineering Branch [General Service (GS)] – பொறியியல் கிளை (பொதுச் சேவை): 42 Posts
- Submarine Technical Engineering – நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப பொறியியல்: 08 Posts
- Electrical Branch [General Service (GS)] – மின்சாரக் கிளை (பொதுச் சேவை): 38 Posts
- Submarine Technical Electrical – நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மின்சாரம்: 08 Posts
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Navy Recruitment 2026 கல்வித் தகுதி
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBAதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy Recruitment 2026 சம்பள விவரங்கள்
இந்தியக் கடற்படையில் 2026-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள குறுகிய கால சேவை ஆணையத்தின் (SSC Officer) கீழ் பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் சப்-லெப்டினன்ட் (Sub Lieutenant) அந்தஸ்தில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின்படி (7th Pay Commission) ஆரம்ப கால அடிப்படை ஊதியமாக $Rs\ 56,100$ வழங்கப்படுகிறது. இதனுடன் ராணுவ சேவை ஊதியம் ($MSP$) $Rs\ 15,500$, அகவிலைப்படி ($DA$), வீட்டு வாடகைப்படி ($HRA$) மற்றும் இதர படிகள் சேர்க்கப்பட்டு, ஒரு மாதத்திற்குத் தோராயமாக $Rs\ 1,25,000$ (Gross Salary) வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Interview ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 24.01.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 24.02.2026
Indian Navy Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.01.2026 முதல் 24.02.2026 தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் Registration & Login Lnk | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









