12வது படித்திருந்தால் இந்திய விமானப் படையில் Airmen வேலைவாய்ப்பு.. மாதம்:ரூ.26900 சம்பளம்! Indian Air Force Airmen Recruitment 2025

Indian Air Force Airmen Recruitment 2025: இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள பல்வேறு Airmen In Group ‘y’ (Non-technical) Medical Assistant Trade பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய விமானப்படை
காலியிடங்கள்Airmen In Group ‘y’ (Non-technical)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://airmenselection.cdac.in/

இந்திய விமானப்படை Airmen வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Airmen In Group ‘y’ (Non-technical) Medical Assistant Trade For Airmen: பல்வேறு காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய விமானப்படை Airmen பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% ஒட்டுமொத்த மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் போன்ற தொழிற்கல்வி அல்லாத பாடப்பிரிவுகளுடன் கூடிய இரண்டு வருட தொழிற்கல்வி படிப்பை குறைந்தபட்சம் 50% ஒட்டுமொத்த மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடனும் முடித்திருக்க வேண்டும்.
  • டிப்ளமோ/பி.எஸ்சி பார்மசி முடித்த விண்ணப்பதாரர்கள்: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% ஒட்டுமொத்த மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, டிப்ளமோ/பி.எஸ்சி பார்மசியில் குறைந்தபட்சம் 50% ஒட்டுமொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Airmen மருத்துவ உதவியாளர் பணி (12th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு) – விண்ணப்பதாரர் திருமணமாகாதவராகவும், 02 ஜூலை 2005 மற்றும் 02 ஜூலை 2009 (இரண்டு நாட்களும் உட்பட) ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • Airmen மருத்துவ உதவியாளர் பணி (டிப்ளமோ/பி.எஸ்சி பார்மசி முடித்த விண்ணப்பதாரர்களுக்கு) – திருமணமாகாத விண்ணப்பதாரர் 02 ஜூலை 2002 மற்றும் 02 ஜூலை 2007 (இரண்டு நாட்களும் உட்பட) ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். திருமணமாகிய விண்ணப்பதாரர் 02 ஜூலை 2002 மற்றும் 02 ஜூலை 2005 (இரண்டு நாட்களும் உட்பட) ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய விமானப்படையில் Airmen பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 26,900/- சம்பளம் வழங்கப்படும்.

இந்திய விமானப்படை Airmen வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான தேர்வு, பல்வேறு கட்டங்களாக நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • கட்டம் I: Online Test (Objective) ஆன்லைன் தேர்வு
  • கட்டம் II: PFT-I & PFT-II (உடல் தகுதித் தேர்வுகள்)
  • Adaptability Test-I, Adaptability Test-II
  • கட்டம் III: Medical Examination (மருத்துவப் பரிசோதனை)

மேலும் விரிவான தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

CategoryApplication Fee
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.550/-

கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 11.07.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2025

இந்திய விமானப்படை Airmen வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://airmenselection.cdac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூலை 11, 2025 முதல் ஜூலை 31, 2025 வரை பெறப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment