IB Security Assistant Recruitment 2025: 10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? மத்திய அரசின் வேலை வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், இது உங்களுக்கான பொன்னான வாய்ப்பு! இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau), Security Assistant / Executive பதவிக்கு மொத்தம் 4987 காலியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IB Security Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | புலனாய்வுப் பிரிவு Intelligence Bureau (IB) |
காலியிடங்கள் | 4987 |
பணிகள் | Security Assistant / Executive |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.08.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.mha.gov.in |
IB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
புலனாய்வுப் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Security Assistant / Executive | 4987 |
மொத்தம் | 4987 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IB Security Assistant Recruitment 2025 கல்வித் தகுதி
புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) Security Assistant / Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 27 ஆகவும் இருக்க வேண்டும். இது, பணியின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அளவுகோலாகும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:
- SC/ ST விண்ணப்பதாரர்கள்: இவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு உண்டு.
- OBC விண்ணப்பதாரர்கள்: இவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு உண்டு.
IB Security Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) Security Assistant / Executive பதவியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும்.
IB Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானோர், Tier-I: Written Exam (Objective type), Tier-II: Written Exam (Descriptive type), மற்றும் Tier-III: Interview/ Personality test ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும் தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- Female/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.550/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.650/-
- கட்டண முறை: ஆன்லைன்
IB Security Assistant Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025
IB Security Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
புலனாய்வுப் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.07.2025 முதல் 17.08.2025 தேதிக்குள் www.mha.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் (விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.07.2025) | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |