ECIL Recruitment 2025: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 22, 2025. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ECIL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Electronics Corporation of India Limited (ECIL) எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) |
காலியிடங்கள் | 160 |
பணிகள் | Technical Officer – C |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 22.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ecil.co.in/ |
ECIL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது, டெக்னிகல் ஆபிசர் (Technical Officer) பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் சரிபார்க்கலாம்.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Technical Officer – C | 160 |
மொத்தம் | 160 |
ECIL Recruitment 2025 கல்வித் தகுதி
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் Technical Officer பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் B.E./B.Tech. படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ECE/ ETC/ E&I/ Electronics/ EEE/ Electrical/ CSE/ IT/ Mechanical ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ECIL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படுகின்றன.
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) அறிவிப்பின்படி, டெக்னிகல் ஆபிசர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ. 25,000, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ. 28,000, மற்றும் மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் மாதம் ரூ. 31,000 என சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்த வேலைவாய்ப்புக்கான தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது:
- குறுகிய பட்டியல் (Short Listing): விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் குறுகிய பட்டியல் செய்யப்படுவார்கள்.
- நேர்காணல் (Personal Interview): குறுகிய பட்டியல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 16.09.2025
- விண்ணப்பம் முடியும் நாள்: 22.06.2025
ECIL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.09.2025 முதல் 22.09.2025 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecil.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |