Central Bank of India Recruitment 2026: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி தற்போது காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.03.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Central Bank of India Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Central Bank of India சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
| காலியிடங்கள் | 275 |
| பணி | Specialist Officer |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 23.03.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.centralbankofindia.co.in/ |
Central Bank of India Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Specialist Officer – 275 காலியிடங்கள்
பதவி வாரியான காலியிட விவரங்கள்:
| பதவியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
| Software Developer (Developer – Java) | 13 |
| Mobile Developer – Android/IOS | 03 |
| Software Developer (Developer Dot Net) | 06 |
| Database Administration | 11 |
| Digital Channel Manager / Digital Application Specialist | 23 |
| Linux / Solaris / SAN / Storage / SRE / OpenShift | 14 |
| Windows / AD | 05 |
| Cloud Manager | 05 |
| Information Security, Cyber Security & IT Governance, Risk | 38 |
| Network Administrator / Network Security | 05 |
| Production Support / ROC / Digital Support | 26 |
| Enterprise / Integration / Public Cloud Architect | 06 |
| DevSecOps | 04 |
| Web Server / Web Logic Administrator | 03 |
| Data Architect | 02 |
| Data Engineer / Data Quality / ETL / PLSQL / BI | 15 |
| Data Scientist | 06 |
| Gen AI | 02 |
| IT Officer | 82 |
| Risk Manager | 04 |
| Taxation / CA | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Central Bank of India Recruitment 2026 கல்வித் தகுதி
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி Specialist Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்:
- B.E / B.Tech (தொடர்புடைய துறையில்)
- MCA (Master of Computer Applications)
Central Bank of India Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 Specialist Officer பணிக்கு, பதவியின் Scale அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
- Scale IV (Chief Manager) – அதிகபட்சம் 45 வயது
- Scale I (Assistant Manager) – அதிகபட்சம் 30 வயது
- Scale II (Manager) – அதிகபட்சம் 35 வயது
- Scale III (Senior Manager) – அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு விவரங்கள்:
| வகை | வயது தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 ஆம் ஆண்டிற்கான Specialist Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, பதவிகளுக்கான மாத சம்பள விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:
- Chief Manager (Scale IV) – ₹1,02,300 முதல் ₹1,20,940/- வரை
- Senior Manager (Scale III) – ₹85,920 முதல் ₹1,05,280/- வரை
- Manager (Scale II) – ₹64,820 முதல் ₹93,960/- வரை
- Assistant Manager (Scale I) – ₹48,480 முதல் ₹85,920/- வரை
தேர்வு செயல்முறை
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- ஆன்லைன் தேர்வு (Online Examination)
- நேர்முகத் தேர்வு (Interview)
Central Bank of India Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
- கட்டண முறை: ஆன்லைன்
Central Bank of India Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2026
Central Bank of India Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.02.2026 முதல் 23.03.2026 தேதிக்குள் www.centralbankofindia.co.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |








