Punjab and Sind Bank Recruitment 2026: பஞ்சாப் & சிந்து வங்கி (P&SB) இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியான இந்த வங்கி தற்போது காலியாக உள்ள 1000 Local Bank Officers (உள்ளூர் வங்கி அதிகாரிகள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Punjab and Sind Bank Recruitment 2026
| Description | Details |
| துறைகள் | பஞ்சாப் & சிந்து வங்கி |
| காலியிடங்கள் | 1000 |
| பணி | Local Bank Officers (உள்ளூர் வங்கி அதிகாரிகள்) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 20.04.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | punjabandsindbank.co.in |
Punjab and Sind Bank Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Local Bank Officers) – 1000 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
| மாநிலம் | காலியிடங்கள் |
| சத்தீஸ்கர் | 80 |
| குஜராத் | 125 |
| ஹிமாச்சல் பிரதேசம் | 20 |
| ஜார்கண்ட் | 10 |
| கர்நாடகா | 60 |
| கேரளா | 10 |
| மத்திய பிரதேசம் | 60 |
| மகாராஷ்டிரா | 60 |
| ஒடிசா | 80 |
| தமிழ்நாடு | 65 |
| தெலுங்கானா | 30 |
| உத்தரப் பிரதேசம் | 200 |
| அருணாச்சல பிரதேசம் | 15 |
| அசாம் | 50 |
| நாகாலாந்து | 5 |
| மேற்கு வங்காளம் | 30 |
| பஞ்சாப் | 100 |
| மொத்தம் | 1000 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Punjab and Sind Bank Recruitment 2026 கல்வித் தகுதி
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கான கல்வி மற்றும் அனுபவத் தகுதிகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன:
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: ஏதேனும் ஒரு பொதுத்துறை வங்கி (Scheduled Commercial Bank) அல்லது மண்டல ஊரக வங்கியில் (Regional Rural Bank) அதிகாரியாகக் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கிளை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவக் கணக்கீடு: இந்த 18 மாத அனுபவமானது உங்களது அடிப்படை பட்டப்படிப்பை முடித்த பிறகு பெற்ற அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி Local Bank Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது வரம்பு தளர்வு |
| SC/ ST | 5 years |
| OBC | 3 years |
| PwBD (Gen/ EWS) | 10 years |
| PwBD (SC/ ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
சம்பள விவரங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி Local Bank Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் Rs.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
பஞ்சாப் & சிந்து வங்கி பணிக்கான தேர்வு செயல்முறை பல்வேறு நிலைகளைக் கொண்டது.
- எழுத்துத் தேர்வு (Written Test): விண்ணப்பதாரர்களின் திறனை மதிப்பீடு செய்ய நடத்தப்படும் முதற்கட்டத் தேர்வு.
- ஆய்வு (Screening): சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் முறை.
- நேர்முகத் தேர்வு (Personal Interview): தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடன் நடத்தப்படும் நேரடி உரையாடல்.
- உள்ளூர் மொழித் திறன் (Proficiency in Local Language): சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
- இறுதித் தகுதிப் பட்டியல் (Final Merit List): எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
- இறுதித் தேர்வு (Final Selection): தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு இறுதிச் சேர்க்கை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
- சென்னை
- கோயம்புத்தூர்
- திருநெல்வேலி
- திருச்சிராப்பள்ளி
- சேலம்
- மதுரை
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PwBD விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.850/-
Punjab and Sind Bank Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2026
Punjab and Sind Bank Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் & சிந்து வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://punjabandsindbank.co.in/ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களும் இணைத்து 31.03.2026 முதல் 20.04.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |







