HVF Avadi Recruitment 2026: இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
HVF Avadi Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | கனரக வாகன தொழிற்சாலை Heavy Vehicles Factory, Avadi |
| காலியிடங்கள் | 450 |
| பணிகள் | Graduate Apprentices, Diploma (Technician) Apprentices, Non-Engineering Graduate Apprentices |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 20.04.2026 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nats.education.gov.in/ |
HVF Avadi Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (Heavy Vehicles Factory) பல்வேறு துறைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Graduate Apprentices (Engineering / Technology) – 150 காலியிடங்கள்
- Diploma Apprentices (Technician) – 50 காலியிடங்கள்
- Non-Engineering Graduate Apprentices – 250 காலியிடங்கள்
பிரிவு I: பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentices – Engineering)
| பொறியியல் துறை | காலியிடங்கள் |
| இயந்திரப் பொறியியல் (Mechanical) | 30 |
| மின் மற்றும் மின்னணுவியல் (EEE) | 10 |
| மின்னணு மற்றும் தகவல் தொடர்பு (ECE) | 10 |
| கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் (CSE/IT) | 20 |
| சிவில் பொறியியல் (Civil) | 15 |
| ஆட்டோமொபைல் பொறியியல் (Automobile) | 15 |
| இதர துறைகள் (Production/Metallurgy/Mechatronics/Instrumentation/Allied branches) | 50 |
| மொத்தம் | 150 |
பிரிவு II: டிப்ளமோ அப்ரண்டிஸ் (Diploma/Technician Apprentices)
| டிப்ளமோ துறை | காலியிடங்கள் |
| இயந்திரப் பொறியியல் (Mechanical) | 25 |
| மின் மற்றும் மின்னணுவியல் (EEE) | 07 |
| மின்னணு மற்றும் தகவல் தொடர்பு (ECE) | 05 |
| கணினி பொறியியல் (Computer Engg) | 03 |
| சிவில் பொறியியல் (Civil) | 05 |
| ஆட்டோமொபைல் பொறியியல் (Automobile) | 05 |
| மொத்தம் | 50 |
பிரிவு III: பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் (Non-Engineering Graduates)
| பட்டப்படிப்பு | காலியிடங்கள் |
| பி.காம் (B.Com) | 100 |
| பி.சி.ஏ (BCA – Computer related) | 75 |
| இதர பட்டதாரிகள் (BA, B.Sc, BBA, BBM) | 75 |
| மொத்தம் | 250 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
| பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
| Graduate Apprentices (Engineering / Technology) | சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் (B.E / B.Tech – Full time) |
| Diploma Apprentices (Technician) | சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma – Full time) முடித்திருக்க வேண்டும். |
| Non-Engineering Graduate Apprentices | ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (BA / BSc / BCom / BBA / BCA etc. – Full time) பெற்றிருக்க வேண்டும். |
குறிப்பு:
- தகுதி பெறும் ஆண்டுகள்: 2022, 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- வசிக்கும் மாநிலம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.
HVF Avadi Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | மாதச் சம்பளம் |
| Graduate Apprentices (Engineering / Technology) | ₹18,000/- |
| Diploma Apprentices (Technician) | ₹16,200/- |
| Non-Engineering Graduate Apprentices | ₹18,000/- |
HVF Avadi Apprentice Recruitment 2026 தேர்வு செயல்முறை
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை (Short Listing), சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
HVF Avadi Apprentice Recruitment 2026 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 16.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.04.2026
HVF Avadi Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.03.2026 முதல் 20.04.2026 தேதிக்குள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் சென்று Student ஆக Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய குறிப்பு: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
NATS இணையதளத்தில் Registration மற்றும் Apply செய்வதற்கான வழிமுறைகள்:








