RBI Assistant Recruitment 2026

டிகிரி போதும்…இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை – 650 காலியிடங்கள் || மாதம் ரூ.58,514/- சம்பளம்! RBI Assistant Recruitment 2026

RBI Assistant Recruitment 2026: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 650 Assistant (உதவியாளர்) காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், 08.03.2026-க்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்திய ரிசர்வ் வங்கி
Reserve Bank of India
காலியிடங்கள்650
பணிகள்Assistant (உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி08.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://opportunities.rbi.org.in/

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணிகள்காலியிடங்கள்
Assistant (உதவியாளர்)650

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

பணியின் பெயர்கல்வித் தகுதி
உதவியாளர் (Assistant)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது பின்வரும் வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்:

  • அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள் (இதற்கு மிகாமல் இருக்க வேண்டும்).
  • குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள் (பூர்த்தியடைந்திருக்க வேண்டும்).

அதிகபட்ச வயது வரம்பு தளர்வு (Upper Age Relaxation):

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:

விண்ணப்பதாரர் வகை (Category)வயது தளர்வு (Age Relaxation)
SC / ST (பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினர்)5 ஆண்டுகள்
OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) (மாற்றுத்திறனாளிகள் – பொதுப்பிரிவு)10 ஆண்டுகள்
PwBD (SC / ST) (மாற்றுத்திறனாளிகள் – SC/ST பிரிவு)15 ஆண்டுகள்
PwBD (OBC) (மாற்றுத்திறனாளிகள் – OBC பிரிவு)13 ஆண்டுகள்
Ex-Servicemen (முன்னாள் ராணுவத்தினர்)அரசு விதிமுறைகளின்படி
Widows / Divorced Women (விதவைகள் / விவாகரத்து பெற்ற பெண்கள்)10 ஆண்டுகள் (மறுமணம் செய்யாதவரை)

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) உதவியாளர் (Assistant) பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மிகச்சிறந்த ஊதியத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் தற்போதைய அறிவிப்பின்படி, இந்தப் பணியில் சேருபவர்களுக்கு ஆரம்பகால மொத்த மாதச் சம்பளமாக (Gross Salary) சுமார் ₹58,514 வழங்கப்படுகிறது. இதில் அடிப்படை ஊதியத்துடன் (Basic Pay) அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), நகர ஈட்டுப்படி (City Compensatory Allowance) மற்றும் போக்குவரத்துப் படி உள்ளிட்ட பல்வேறு படிகள் உள்ளடங்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான தேர்வு செயல்முறை தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது:

  1. Preliminary Examination (Online)/முதல் நிலைத் தேர்வு
  2. Main Examination (Online)/முதன்மைத் தேர்வு
  3. Language Proficiency Test (LPT)/மொழித் திறன் தேர்வு – நீங்கள் எந்த மாநிலத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த மாநில மொழியைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பதைச் சோதிப்பார்கள். உதாரணமாக, தமிழ்நாட்டில் விண்ணப்பித்தால், உங்களுக்குத் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிய வேண்டும்.
  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – Rs.50/- + 18% GST
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.450/- + 18% GST
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தேதிகளை நினைவில் கொள்ளவும்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2026

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 16.02.2026 முதல் 08.03.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top