Indian Air Force Recruitment 2025

இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025

Indian Air Force Recruitment 2025: இந்திய விமானப்படையில் Flying Branch மற்றும் Ground Duty (Technical மற்றும் Non-Technical) பிரிவுகளில் உள்ள 340 பணியிடங்களை நிரப்ப AFCAT தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமானப்படையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.12.2025 ஆகும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய விமானப்படை
Indian Air Force
காலியிடங்கள்340
பணிFlying Branch மற்றும் Ground Duty (Technical மற்றும் Non-Technical)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.12.2025 at 11.30 PM
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://afcat.cdac.in/

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
  • Ground Duty Non Technical பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Commerce பிரிவில் டிகிரி அல்லது B. Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Flying Branch AFCAT and NCC Special Entry பணிகளுக்கு:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 வயது ஆகும்.
  • அதேபோல், அதிகபட்ச வயது வரம்பு 24 வயது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் 02 ஜனவரி 2001 முதல் 01 ஜனவரி 2007 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.

Ground Duty (Technical & Non-Technical) பணிகளுக்கு:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 வயது ஆகும்.
  • இந்த பணிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 வயது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் 02 ஜனவரி 2001 முதல் 01 ஜனவரி 2007 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.

இந்த இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு முக்கிய கட்டங்களைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். அவை எழுத்துத் தேர்வு மற்றும் SSB தேர்வு (SSB Test) ஆகும். மேலும் விரிவான மற்றும் துல்லியமான தேர்வு செயல்முறைக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனமாகப் பார்க்கவும்.

  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.550/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கட்டண முறை: கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.11.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.12.2025

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள் https://afcat.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top