Indian Coast Guard Recruitment 2025: இந்திய கடலோர காவல்படை 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது காலியாக உள்ள 170 Assistant Commandant (General Duty (GD), Technical (Mechanical/ Electrical/ Electronics)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Indian Coast Guard Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய கடலோர காவல்படை Indian Coast Guard |
காலியிடங்கள் | 170 |
பணி | Assistant Commandant |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.07.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://joinindiancoastguard.cdac.in/ |
Indian Coast Guard Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை உதவி கமாண்டன்ட் ஆட்சேர்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Commandant – General Duty (GD) | 140 |
Assistant Commandant – Technical (Mechanical/ Electrical/ Electronics) | 30 |
மொத்தம் | 170 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Coast Guard Assistant Commandant Recruitment 2025 கல்வித் தகுதி
இந்திய கடலோர காவல்படைக்கான கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Assistant Commandant – General Duty (GD) | (i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (ii) கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட 12ஆம் வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. டிப்ளமோ முடித்து பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களும் தகுதியுடையவர்கள், அவர்கள் டிப்ளமோ படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களைக் கொண்டிருக்க வேண்டும். |
Assistant Commandant – Technical (Mechanical/ Electrical/ Electronics) | (i) மெக்கானிக்கல் (Mechanical): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கப்பல் கட்டுமானம் (Naval Architecture), மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமொபைல், மெகாட்ரானிக்ஸ், தொழில்துறை மற்றும் உற்பத்தி (Industrial and Production), உலோகம் (Metallurgy), வடிவமைப்பு (Design), ஏரோநாட்டிக்கல் (Aeronautical) அல்லது விண்வெளி (Aerospace) பொறியியல் பட்டம் தேவை. அல்லது இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அங்கீகரித்த மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் “A” மற்றும் “B” பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவற்றின் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வு (AMIE) பெற்றிருக்க வேண்டும். (ii) எலக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் (Electrical/ Electronics): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது பவர் இன்ஜினியரிங் அல்லது பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அங்கீகரித்த மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் “A” மற்றும் “B” பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவற்றின் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வு (AMIE) பெற்றிருக்க வேண்டும். (iii) பொது நிபந்தனை: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட 12ஆம் வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. டிப்ளமோ முடித்து பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களும் தகுதியுடையவர்கள், அவர்கள் டிப்ளமோ படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களைக் கொண்டிருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, Assistant Commandant பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 மற்றும் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Indian Coast Guard Assistant Commandant Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை உதவி கமாண்டன்ட் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் சம்பளம் விபரங்கள் கீழே பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | சம்பளம் |
Assistant Commandant – General Duty (GD) | Rs. 56,100/- வழங்கப்படும் |
Assistant Commandant – Technical (Mechanical/ Electrical/ Electronics) | Rs. 56,100/- வழங்கப்படும் |
Indian Coast Guard Assistant Commandant Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Stage-I {Coast Guard Common Admission Test (CGCAT)}
- Stage-II {Preliminary Selection Board (PSB)}
- Stage-III (FSB)
- Stage-IV (Medical Examination)
- Stage-V (Induction)
Indian Coast Guard Assistant Commandant Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Coast Guard Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.07.2025 முதல் 23.07.2025 தேதிக்குள் https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login இணையதளத்தில் சென்று “Register to Create Account” பட்டனை கிளிக் செய்து Account Create செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கீழே விண்ணப்பிக்கும் லிங்க் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு PDF லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |