ISRO ICRB Recruitment 2025: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ISRO ICRB ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 320 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.06.2025-க்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக அரசுப் பணிகளில் சேர விரும்பும் தகுதியுடைய அனைவரும் உடனே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்!
ISRO ICRB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ISRO ICRB – Indian Space Research Organization |
காலியிடங்கள் | 320 |
பணிகள் | Scientist/ Engineer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.isro.gov.in/ |
ISRO VSSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Scientist/ Engineer ‘SC’ (Electronics) | 113 |
Scientist/ Engineer ‘SC’ (Mechanical) | 160 |
Scientist/ Engineer ‘SC’ (CS) | 44 |
Scientist/ Engineer ‘SC’ (Electronics) – Physical Research Laboratory (PRL) | 02 |
Scientist/ Engineer ‘SC’ (CS) – Physical Research Laboratory (PRL) | 01 |
மொத்தம் | 320 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இஸ்ரோ ICRB-க்கான கல்வித் தகுதி:
- Scientist/ Engineer ‘SC’ (Electronics) – BE/ B.Tech or equivalent in Electronics & Communication Engineering அல்லது அதற்கு சமமான பட்டம், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.
- Scientist/ Engineer ‘SC’ (Mechanical) – BE/ B.Tech or equivalent in Mechanical Engineering அல்லது அதற்கு சமமான பட்டம், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.
- Scientist/ Engineer ‘SC’ (CS) – BE/B.Tech or equivalent in Computer Science Engineering அல்லது அதற்கு சமமான பட்டம், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.
- Scientist/ Engineer ‘SC’ (Electronics) – Physical Research Laboratory (PRL) – BE/ B.Tech or equivalent in Electronics & Communication Engineering அல்லது அதற்கு சமமான பட்டம், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.
- Scientist/ Engineer ‘SC’ (CS) – Physical Research Laboratory (PRL) – BE/B.Tech or equivalent in Computer Science Engineering அல்லது அதற்கு சமமான பட்டம், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது CGPA 6.84/10 பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் அவசியம். இருப்பினும், இந்திய அரசின் விதிகளின்படி குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், PwBD (Persons with Benchmark Disabilities) பிரிவினருக்கு பொது/EWS பிரிவில் 10 ஆண்டுகள், SC/ST பிரிவில் 15 ஆண்டுகள், மற்றும் OBC பிரிவில் 13 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு உண்டு. இந்தத் தளர்வுகள் மூலம், ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற இயலும்.
சம்பள விவரங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 56,100/- அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இது நிலை 10 (Pay Level 10) கீழ் வரும் ஊதியமாகும். அடிப்படைச் சம்பளத்துடன், இந்திய அரசின் விதிகளின்படி அகவிலைப்படி (Dearness Allowance – DA), வீட்டு வாடகைப்படி (House Rent Allowance – HRA), மற்றும் போக்குவரத்துப் படி (Transport Allowance – TA) போன்ற பல்வேறு படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/- (திரும்பப் பெறலாம் – ரூ.750/-)
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/- (திரும்பப் பெறலாம் – ரூ.500/-)
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
ISRO VSSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.05.2025 முதல் 16.06.2025 தேதிக்குள் https://www.isro.gov.in/ இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |